அப்போது வெளியே வந்த சின்னதுரையின் மனைவி தனது குழந்தையின் கையில் காப்பு இல்லாததை பார்த்து சத்தம் போட்டு பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 1 பவுன் தங்க காப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்து துறையூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுபோன்று எவரேனும் ஜோதிடம் பார்ப்பது, குறி சொல்வது, பிச்சை கேட்பது போன்று எந்த காரணத்தைக் கூறி தங்களது வீட்டிற்கு வந்தாலும் அவர்களிடம் ஜாக்கிரதையாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.