தங்கவேலு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதில் தங்கவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகள் கவிதா வீட்டில் இருந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கவேலு குடிபோதையில் தனது மனைவி மாரியம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த அவரது மகள் கவிதாவுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. உடனே தங்கவேலு கதவை சாத்திவிட்டு வெளியே வந்துள்ளார்.
கவிதா வீட்டில் இருந்து சத்தம் போடவே அருகே இருந்தவர்கள் இதனைக் கண்டு கவிதாவை படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.