இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.