பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. உங்களுக்கு தெரியாதா, கண்ணுக்கெதிரே இவ்வளவு பிளாஸ்டிக்குகள் பரவிக்கிடப்பதை நீங்கள் பார்க்கவில்லையா என கேட்ட ஆட்சியர் சற்றுமுன்தான் சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தினம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை துவக்கி வைத்து விட்டு வருகிறேன். இங்கு இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
பின்னர் பார் உரிமையாளர், ஊழியர்களை அழைத்து தன் கண் முன்னே பிளாஸ்டிக்குகளை அள்ள உத்தரவிட்டார். இதனையடுத்து ஊழியர்கள் பிளாஸ்டிக்கை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆய்வு முடித்து திரும்பும்போது இந்த இடத்தில் பிளாஸ்டிக் பொருட்களே இருக்கக் கூடாது அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மீண்டும் இது போன்று பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.