தா. பேட்டை அருகே விறகு அடுப்பில் தீ பற்றி மூதாட்டி பலி

தா. பேட்டை காவல் நிலையை எல்லைக்குட்பட்ட வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியம்மாள் வயது (76) இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (மார்ச்.16) விறகு அடுப்பில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென அவரது உடலில் தீ பற்றியது. 

உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் கூக்குரல் இட்டு கத்திய அவரை அக்கம் பக்கத்தில் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தா. பேட்டை போலீசார் பெரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி