திருச்சியில் பச்சிளம் குழந்தை மூச்சு திணறி பலி

திண்டுக்கல் மாவட்டம், வடசந்தூர், கள்ளூர்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 29), இவரது மனைவி தனலட்சுமி. இத்தம்பதிக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனலட்சுமி திருச்சி, காந்தி மார்க்கெட்டில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். 

அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி