திருச்சி: விடுதியில் பாலியல் தொழில்.. 4 பேர் அதிரடி கைது

திருச்சி திருவானைக்காவில் சந்தைவெளி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலின் பெயரில் போலீசார் நேற்று (மார்ச் 18) திடீரென விடுதிக்குள் புகுந்து சோதனைகள் நடத்தினர். அப்போது அரியலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரு பெண்களையும் மீட்டு காஜாமலை பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து துவாக்குடி மலை பெரியார் தெருவைச் சேர்ந்த லாரன்ஸ் பிரபு, திருச்சி தையக்கார தெருவைச் சேர்ந்த ரபிக் முகமது, திருவானைக்காவல் பிரம்ம தீர்த்தக்கரை நாலாவது பிரகாரம் உள்வீதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி ராஜீவ் காந்தி நகர் நாலாவது தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி