திருச்சி மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூறாவளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் தனது மகனான மோகித் மகள் வீணா ஸ்ரீ ஆகியோருடன் காரில் சூறாவளிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். காரை சரத்குமாரின் தம்பி சந்தோஷ் ஓட்டிச் சென்றார். கார் அவர்களது வீட்டின் அருகே வந்த பொழுது திடீரென காரின் கதவு திறந்ததால் குழந்தைகள் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்த இரண்டு குழந்தைகளும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.