இந்நிலையில் பேராசிரியை டேட்டா என்ட்ரி பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது தரணிதரன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது நண்பன் டேட்டா என்ட்ரி தவறாக செய்ததாகவும் இதனை பார்த்த பேராசிரியை அந்த மாணவனை அடித்து கண்டித்ததாகவும் இதனை பின் இருக்கையில் இருந்த தரணிதரன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பேராசிரியர் தரணிதரனை திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தரணிதரன் இரங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் இது குறித்து சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தம் எல்பிஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு