இந்நிலையில் நேற்று இரவு ஹேமலதாவின் கடைக்கு வந்த முரளி கடையில் வேலை செய்பவர்களை பார்த்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும் ஹேமலதாவையும் ஒருமையில் பேசி இருசக்கர வாகனத்தை வைத்து இடிக்க முற்பட்டுள்ளார். ஹேமலதாவின் கணவர் வந்து முரளியிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது முரளி கடையில் வெங்காயம் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து ஹேமலதாவின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஹேமலதா அளித்த புகாரின் பேரில் முரளியை கைது செய்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து