கடந்த ஏழு வருடங்களாக பிரிந்து வாழும் நிலையில் தாய்க்கும், தந்தைக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் புவனேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை ரமேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மன உளைச்சலில் பள்ளி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.