அப்போது திருச்சி நவல்பட்டு ஊராட்சி கவுன்சிலர் பாலமுருகன் உள்பட 2 பேர் இருசக்கர வாகனத்தில் விமான நிலையம் வந்து விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கவுன்சிலர் பாலமுருகன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா