திருச்சி: பைக் மீது கார் மோதி விபத்து

திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவருடைய பைக் மீது மோதியதில் விபத்துக்குள்ளான பெரியசாமிக்கு வலது கை மணிக்கட்டு, நெற்றி, மார்பு, இரண்டு முழங்காலிலும் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான பெட்டவாய்த்தலை அண்ணா நகரைச் சேர்ந்த சிவராமன் என்பவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி