துறையூர்: மீட்கப்பட்ட முதியவர் சடலம்

துறையூர் அருகே உள்ள புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி பேருந்து நிறுத்தங்கொட்டகையில் அருகே கடந்த 10 தினங்களுக்கு மேலாக கோவிந்தராஜ் என்பவர் தனியாக தங்கி இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று (ஜனவரி 3) உயிரிழந்த நிலையில் அவர் உடல் கிடந்ததாக கரட்டாம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஹரிசுதன் அளித்த தகவலின் பேரில் புலிவலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி