பெரம்பலூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கமலம் (70) வியாழக்கிழமை இரவு வயலுக்குச் சென்றுவிட்டு பெரம்பலூர்-துறையூர் பிரதானச் சாலையைக் கடக்க முயன்றபோது, திட்டக்குடியிலிருந்து துறையூர் நோக்கிச் சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் ஊரகப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு கார் ஓட்டுநரான திட்டக்குடி தமிழ்மணி நகரைச் சேர்ந்த நா. குமார் (50) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.