பெரம்பலூர்: ஓய்வுபெற்ற சித்த மருத்துவர் குணசேகர் (61), நேற்று (மே 6) காலை மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். பெரம்பலூர் மதரஸா சாலையிலிருந்து காமராஜர் வளைவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பிரதீப்ராஜ் (19) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.