பெரம்பலூர்: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு; 30 வருடம் சிறை தண்டனை

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம், மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொளத்தூர் பகுதியில் சிவகங்கை சேர்ந்த மணிகண்டன் (29/25) என்பவர் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மணிகண்டன் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் கண்ணுசாமி மணிகண்டனை தேடி ஆந்திரா மாநிலம் சென்று, அங்கு இருந்து மணிகண்டனை அழைத்து வந்து பாடாலூர் காவல் ஆய்வாளர் சுகந்தியிடம் ஒப்படைத்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

 பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் 25.03.2025-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளி மணிகண்டன் என்பவருக்கு 366 (A) IPC க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம் விதித்தும், 5 (l), 6 of Pocso act - 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம். அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் இதன்படி குற்றவாளிக்கு 30 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1,00,000 ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி