ஜெயங்கொண்டம்: அரசு பள்ளியில் மது அருந்திய 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம் குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தினுள் சமூக விரோதிகள் மது அருந்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் திடீர் தணிக்கை மேற்கொண்டனர். இதில், அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்துவிட்டுச் சென்ற வல்லம் கிராமத்தைச் சேர்ந்த சிவா (29) மற்றும் காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் (29) ஆகிய இருவர் மீது குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி