ஜெயங்கொண்டத்தில் டூவீலர் மெக்கானிக் மனைவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ரமேஷ் (35) சபீராபேகம் (32) இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். 

இதில் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் கணவர் டூவீலர் மெக்கானிக் ரமேஷ் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கமாக சபீராபேகம் நேற்று தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் தனது பிள்ளைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். 

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சபீராபேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையா? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயலுடன் தொடர்பு காரணமா? எனவும் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் பெண் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி