அரியலூர்: திருமாவளவன் நேரில் சென்று நிதியுதவி அளித்து.. ஆறுதல்

திருச்சி மாநாட்டு பேரணியில் கலந்து கொண்ட விசிக நிர்வாகி மாரடைப்பால் உயிர் இழந்தார். சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் நேரில் சென்று நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்த விசிக நிர்வாகி பிரபாகரன் (31) தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் இருந்து சென்ற வேனில் திருச்சி விசிக பேரணியில் கலந்து கொண்டார்.

அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த விசிக தலைவர் திருமாவளவன் நிர்வாகி பிரபாகரன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2,20,000 நிதியுதவி அளித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்த பிரவீன்ராஜ் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி