அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பெரிய ஆனந்தவாடி கிராமத்தில் வசிக்கும் 101 வயது து.ராமசாமி (எ) மொட்டையார் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று கிராமத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அவர் தனது 101வது வயதை எட்டியுள்ளார். தற்போது இவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.