சிலம்பூர் கிராமத்தில் உள்ள காமெடிஸ்வரர் ஆலயத்தில் ரதி-மன்மதன் திருக்கல்யாணம் ஆன்மிக முறைப்படி நடைபெற்றது. புராணக் கதைகள் கூறப்பட்டு, ஆகம விதிகளின்படி திருமணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மன்மதனின் சண்டைக் காட்சி நாடகமாக அரங்கேறி பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.