பிரகதீஸ்வரர்கோயில் அன்னாபிஷேகவிழாவெகு விமர்சையாக நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலில், ஐப்பசி மாத பௌர்ணமி அன்று வெகு விமர்சையாக அன்னாபிஷேக விழா நடைபெற்றது. மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இக்கோயில், யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருவுடையாரை தரிசனம் செய்தனர். கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகரில் அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி