அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு புதிய கோவில் கட்டி, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னாள் மேல் சாந்தி பிரம்மஸ்ரீ உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி யாகசாலையை துவக்கி வைத்தார். யானை மேல் ஐயப்பன் சிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் வழிபாடு செய்தனர். இந்த விழாவில் அரியலூர் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.