அரியலூரில் வாய்க்கால்களை தூர்வார இலக்கு

திருமானூர் வட்டாரத்தில் தூர்வாரும் பணிகளை கள ஆய்வு செய்த வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர், விவசாயிகளிடம் கலந்துரையாடினார். ஒப்பந்ததாரர்கள் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அரியலூர் மாவட்டத்தில் தூர்வாரப்படாமல் இருந்த 'சி', 'டி' பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாரக்கோரி விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ரூ. 29.88 லட்சத்தில் 109 கி.மீ நீளத்துக்கு வாய்க்கால்களைத் தூர்வார இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 41.50 கி.மீ பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி