காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, காளியம்மனுக்கு தேன், பால், சந்தனம், இளநீர், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகாகாளியம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி