உடையார்பாளையம் பகுதியில் உள்ள காமடீஸ்வரர் ஆலயத்தில் நேற்று காப்பு கட்டு நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏரிக்கரையிலிருந்து கரகம் எடுத்து பம்பை மேளம் முழங்க மங்கள இசையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது. பின்னர் காமநேசர் ஆலயத்தில் காப்பு கட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.