அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை, கம்பு மற்றும் எள் வர்த்தகம் நடைபெற்றது. இங்கு 80 கிலோ மூட்டை நிலக்கடலை அதிகபட்சமாக ரூ. 8832க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6029க்கும், கம்பு 100 கிலோ மூட்டை ரூ. 2113க்கும், எள் 80 கிலோ மூட்டை ரூ. 8380க்கும் விற்பனையானது. இந்த விலை நிலவரம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.