இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் அருகில் திடீரென வந்த வெள்ளை நிற மாருதி கார் ஒன்றில் நான்கு பேர் கொண்ட கும்பல் சஞ்சய்யை கடத்திச் சென்று அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில், அரியலூர் ஓடைக்கார தெருவைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு, கடத்தப்பட்ட சஞ்சையின் உறவினரான மதுரையில் வசிக்கும் பிரேமலதா என்பவர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குச்சந்தையில் அதிக பணம் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ரூபாய் 23 லட்சத்தை பெற்றுக் கொண்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சஞ்சையை மூலம் பிரேமலதாவை கண்டுபிடிப்பதற்காக, சஞ்சய்யை காரில் கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.