மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக "நலம் காக்கும் ஸ்டாலின்" - பல் நோக்கு மருத்துவ முகாம் வருகின்ற ஜூலை மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற உள்ளது.
மேலும், இம்முகாமில் பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், மூளை நரம்பியல் போன்ற துறை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் வருகை தர உள்ளார்கள். மேலும் முகாமில் இரத்த பரிசோதனை, ECG மற்றும் X-Ray போன்ற அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்படவுள்ளது.