ஜெயங்கொண்டம் 16 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டாகஆண்டுகளாக போதிய குடிநீர் இல்லை, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பல்வேறு மனுக்கள் அளித்தும் ஆழ்துளை கிணறு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்காத ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.