அப்போது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கங்கைகொண்ட சோழபுரம் அருகே பொன்னேரி இறக்கத்தில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிரே சிதம்பரத்திலிருந்து மதுரைக்கு இறால் ஏற்றிச் சென்ற மினி லாரியும் காரும் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாலத்து கட்டையில் மோதி பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் பயணித்த மூவரில் சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டி வந்த கிருஷ்ணகுமார் காரில் பின் பக்கம் பயணம் செய்த குமார் ஆகிய இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி