அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்தில் உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில், ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, தா. பழூர் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.