பால் கூட்டுறவு கட்டிடத்தினை திறந்து வைத்த MLA

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGS) 2024-2025ன் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தென்னங்கன்று, மாங்கன்று, எலுமிச்சை கன்றுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி