புதிய முழு நேர நியாய விலை கடை திறந்து வைத்த எம்எல்ஏ அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிலிசிகுழி ஊராட்சியில் புதிய நியாய விலை கட்டிடத்தை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார். 12.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார் எம்எல்ஏ கண்ணன். வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நியாய விலை கடை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.