அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இன்று மாசி மக பத்தாம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. பத்தாம் நாள் திருவிழாவான இன்று மகா தீர்த்தவாரி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இந்த புனித நீராடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.