அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பழமை வாய்ந்த கருப்பசாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தக் குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். "சுவாமியே போற்றி" என்ற முழக்கத்துடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.