தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதிமுகவை சேர்ந்த பல்வேறு முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் வரிசையாக இணைந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் மற்றும் அரக்கோணம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவி ஆகியோரும் த.வெ.க-வில் நேற்று (மே 29) இணைந்துள்ளனர்.