ஜெயங்கொண்டத்தில், ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பு அலுவலர் ஒருவர் வியாபாரியை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் விவசாயப் பொருட்களை வாங்காமல் வெளியேறினர். இதனால் நேற்று விற்பனைக்கு வந்த ஆயிரக்கணக்கான எள், கடலை மூட்டைகள் தேக்கமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் பிரச்சனையால் கொள்முதல் தடைபடுவது தொடர்கதையாகி வருகிறது.