அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், சின்ன வளையம், பெரிய வளையம், கங்கைகொண்ட சோழபுரம், கல்லாத்தூர், தண்டலை உள்ளிட்ட கிராமங்களில் இன்று மழை பெய்து வருகிறது. மாலை கார்த்திகை தீபம் நடைபெற உள்ள நிலையில், இந்த மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. மழையின் காரணமாக அப்பகுதி குளிர்ச்சியாக காணப்படுகிறது.