ஜெயங்கொண்டம்: பாஜக மாநில இணைப் பொருளாளர் பேட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவின் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இதுவரை 9 ஆயிரத்து 808 கோடியே 53 லட்சம் மதிப்பிலான விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 78 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் தமிழ்நாட்டிற்கு எப்போது வருகிறாரோ அப்போதெல்லாம் தமிழ் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மீது உள்ள பற்றை வெளிக்காட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு தொழில் வளர்ச்சிக்காக சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி