அரியலூர் மாவட்டம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் மீனாட்சி ராமசாமி கல்லூரி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் உடையார்பாளையம் அருகே தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.02.2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் அரியலூர், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன.