அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று இரவு 9 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழையாக தற்போது வரை பெய்து வருகிறது. மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக தற்போழுது சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வருகின்றனர். மேலும் பலத்த மழை காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.