அரியலூரில் சூரிய சக்தி தொழில்முனைவோர் இலவச பயிற்சி

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ESDP சார்பில் சூரிய சக்தி தொழில்முனைவோருக்கான 9 நாள் கட்டணமில்லா பயிற்சி முகாம் வருகிற 13.03.2026 முதல் நடைபெற உள்ளது. தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (NIESBUD) இந்த பயிற்சியை வழங்குகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு முடித்த, 18 முதல் 55 வயதுக்குட்பட்டோர் இதில் பங்கேற்கலாம். பயிற்சி பெறுவோருக்கு மதிய உணவு மற்றும் அரசு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9499055914 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி