ஜெயங்கொண்டம்: பாஜக மாவட்ட தலைவரின் குற்றச்சாட்டு; வீடியோ வைரல்

ஜெயங்கொண்டம் - தொல்லியல் துறை அதிகாரிகள் குண்டர்களை வைத்து தங்களை மிரட்டுவதாக பாஜக மாவட்ட தலைவரின் குற்றச்சாட்டு வீடியோ வைரலாகி வருகிறது. 

தமிழக பாஜக சார்பில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க இந்து மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் வகையில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் அக்கட்சியினர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அங்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கோயில் வளாகத்தில் மதப் பிரச்சாரம் செய்யக்கூடாது என தொல்லியல் துறை அதிகாரிகள் குண்டர்களை வைத்து தங்களை மிரட்டுவதாக மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி