அரியலூர் – மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் எடுத்து சிறப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர், மருதூர், தெற்குபட்டி, வல்லம் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவில் பக்தர்கள் சமயபுரம் பாதயாத்திரை முன்னிட்டு பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஏரியிலிருந்து கரகம் ஜோடித்து, அக்னிசட்டி, அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி, அன்னதானம் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி