அரியலூர் மாவட்டம் கோவில்வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பாமகவில் பசுமைத் தாயக அமைப்பின் ஆண்டிமடம் ஒன்றியத் தலைவராக உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் மீது (ஜூன் 13) மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு நேற்று ஜெயங்கொண்டம் டிஎஸ்பி-யிடம் புகார் அளித்தார்.