அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்திற்கு தமிழக போக்குவரத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைக்க வருகை புரிந்தார். அவரை அப்பகுதி மக்கள் மலர் தூவி, மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் போக்குவரத்து, அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.