அரியலூர்: ஆட்சியர் அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை கொளுத்தாமல், மாசு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுப்புறக் காற்று மாசுபடுவதுடன், கண், மூக்கு, தொண்டை, தோல் எரிச்சல், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாசில்லா போகி கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி