அரியலூர்: தீப்பிடித்து எரிந்த கொட்டகை

நேற்று சூசையப்பர்பட்டிணம் கிராமத்தில் விவசாயி லாரன்ஸுக்குச் சொந்தமான மேற்கூரையாகக் கொண்ட கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கொட்டகையில் இருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் உரமூட்டைகள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி